/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலை இடிக்க எதிர்ப்பு ஹிந்து முன்னணி மனு
/
கோவிலை இடிக்க எதிர்ப்பு ஹிந்து முன்னணி மனு
ADDED : பிப் 20, 2026 05:23 AM
ஈரோடு: ஹிந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி, ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் அளித்த மனு: பெருந்துறை தாலுகா திருவாச்சி கிராமத்தில், 150 ஆண்டு பழமையான சாலைவன கருப்பராயன் கோவில் உள்ளது. சாலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கோவிலை இடிக்க உயர்நீதிமன்றத்தில் கடந்த நவ.,ல் உத்தரவு பிறப்பிக்-கப்பட்டது.
இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவில் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்-டுள்ளோம். ஆனாலும் பெருந்துறை தாசில்தார் கோவிலை இடித்து அகற்ற முயற்சித்து வரு-கிறார். சாலை இடத்திலோ, தேசிய நெடுஞ்-சாலை இடத்திலோ இல்லை. அரசு புறம்-போக்கில் தான் உள்ளது. வழக்கு முடியும் வரை கோவிலை இடிக்ககூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

