/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மஞ்சளில் நுண்ணுாட்ட சத்து குறைபாட்டை தடுக்கும் வழி
/
மஞ்சளில் நுண்ணுாட்ட சத்து குறைபாட்டை தடுக்கும் வழி
மஞ்சளில் நுண்ணுாட்ட சத்து குறைபாட்டை தடுக்கும் வழி
மஞ்சளில் நுண்ணுாட்ட சத்து குறைபாட்டை தடுக்கும் வழி
ADDED : செப் 07, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் தற்போது மஞ்சள் பயிர், 8,800 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரில் இரும்பு, ஜிங்க் சத்து பற்றாக்குறை பரவலாக காணப்படுகிறது.
இதனால் இலைகள் பச்சையத்தை இழந்து வெளிர் பச்சை நிறமாக காணப்படும்.
சத்து பற்றாக்குறை அதிகரிக்கும்போது, வெள்ளை நிறமாகி இறுதியில் கருகிவிடும். இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய பெரஸ் சல்பேட் மற்றும் ஜிங்க் சல்பேட் ஒரு லிட்டருக்கு, 0.5 - 1.0 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிப்பது அவசியம். இத்தகவலை தோட்டக்கலை துணை இயக்குனர் குரு சரஸ்வதி தெரிவித்துள்ளார்.