/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தபால் ஓய்வூதியர் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
/
தபால் ஓய்வூதியர் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
ADDED : ஜூலை 26, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில், ஈரோடு, காந்திஜி சாலை தலைமை தபால் அலுவலகம் முன், மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. அகில இந்திய தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் சின்னசாமி தலைமை வகித்தார். எட்டாவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். கோரிக்கை அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டு, தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து பழைய இந்தியன் வங்கி வரை சாலையோரம் மனித சங்கிலியாக நின்றனர்.