ADDED : அக் 21, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு,
நசியனுார், வாய்க்கால்கரைபுதுாரை சேர்ந்தவர் நாகராஜ், 38;
தறிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி, ராஜேஸ்வரி, 38;
சூரம்பட்டியில் ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தார்.
தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.நேற்று
முன்தினம் மாலை, கணவன், மனைவி இருவரும் வீட்டில் மது அருந்தியதாக
கூறப்படும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்
நாகராஜ்கட்டையால் தாக்கியதில் ராஜேஸ்வரி பலியானார். இதையடுத்து நாகராஜ் ஓட்டம் பிடித்தார். சித்தோடு போலீசார் தேடி வந்த நிலையில்,நசியனுார் அருகே நேற்று கைது செய்தனவ். ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.
