ADDED : மே 02, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
ஈரோடு கே.என்.கே.,சாலை, பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மகேந்திரன், 42. இவர் மனைவி பரணி, 32. மகேந்திரன் துணி கடையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 28ல் வாங்கிய கடனை திருப்பி செலுத்த நண்பருடன் பைக்கில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வரை சென்றார். அங்கு இறங்கி கொண்டார். இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு செல்லவில்லை. எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. மாயமான கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என பரணி அளித்த புகாரின் படி ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

