ADDED : நவ 09, 2025 04:45 AM
ஈரோடு:ஈரோடு விதை பரிசோதனை நிலைய வேளாண் அதிகாரி ஆசைத்தம்பி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தரமான
விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்தினால், முழு பலனை பெறலாம்.
முன்னதாக விதையின் முளைப்பு திறனை அறிந்து கொள்ள பரிசோதனை அவசியம்.
ஈரோடு அருகே திண்டல் வித்யா நகர் பகுதியில் உள்ள விதை பரிசோதனை
நிலையத்தில், நேரில் அல்லது தபாலில் விதை பரிசோதனை செய்யலாம். ஒரு
மாதிரிக்கு, 80 ரூபாய் கட்டணம்.
விதை பரிசோதனைக்கு நெல்லுக்கு,
400 கிராம், பயறு வகை, சோளத்துக்கு, 150 கிராம், மக்காசோளம்,
நிலக்கடலைக்கு, 500 கிராம், எள்ளுக்கு, 250 கிராம், வெங்காயம்,
தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், கீரை வகைகளுக்கு, 10 கிராம்,
பூசணிக்காய், பந்தல் காய்கறி, வெண்டைக்காய்க்கு, 150 கிராம் மாதிரி
கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

