/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கருணை காட்டாவிட்டால் கருணை கொலை செய்யுங்க'
/
'கருணை காட்டாவிட்டால் கருணை கொலை செய்யுங்க'
ADDED : டிச 03, 2024 07:20 AM
ஈரோடு: பெருந்துறை தாலுகா வாய்ப்பாடி, சி.எஸ்.ஐ., நகர் பகுதியில் வசிக்கும் ஜோதி மார்கிரேட், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: எனக்கு
திருமணமாகவில்லை. எனது பெற்றோர் இறந்து விட்டனர். மனநிலை
பாதிக்கப்பட்ட இரண்டு மாற்றுத்திறனாளிகள் தம்பிகள் எனக்கு உள்ளனர். கடந்த, 20
ஆண்டுகளாக அவர்களை நான் பராமரித்து வருகிறேன். எனது தாத்தா காலத்தில்
கட்டப்பட்ட, ஒரே ஒரு அறை கொண்ட ஓட்டு வீட்டில், நாங்கள் வசிக்கிறோம். வேறு
வீடு பார்த்து வாடகைக்கு செல்லும் வசதி இல்லை. நாங்கள் வசிக்க பிரதமரின் ஆவாஸ்
யோஜனா திட்டம் அல்லது கலைஞரின் கனவு இல்லம் திட்-டத்தில் இலவச வீடு வழங்க
வேண்டும். இதுகுறித்து பலமுறை மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை.
எங்களுக்கு வீடு வழங்க மறுக்கும் பட்சத்தில், மூவரையும் கருணை கொலை செய்ய
வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.இதேபோல் 'விண்ணில் சிறகடிக்கலாம்' சிறப்பு குழந்தைகளின் பெற்றோர் அமைப்பு
சார்பில், எஸ்.சிவவாணி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி
கூறியதாவது: எங்கள் அனைவருக்கும் வெவ்வேறு வகையான மாற்றுத்திறனாளி
குழந்-தைகள் உள்ளன. அவர்களை கவனிப்பதால், எங்களால் எந்த வேலைக்கும் செல்ல
முடியவில்லை. நாங்கள் வாடகை வீடு-களில் வசிப்பதை, பலரும் விரும்புவதில்லை.
வீடு தர மறுக்கின்-றனர். நாங்கள் தனியாக, சொந்த வீட்டில் வசிக்கும் வகையில், இலவச
வீட்டு மனையுடன் வீடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.