/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெவ்வேறு இடங்களில் தீ விபத்து நகை, பணம் எரிந்து சாம்பல்
/
வெவ்வேறு இடங்களில் தீ விபத்து நகை, பணம் எரிந்து சாம்பல்
வெவ்வேறு இடங்களில் தீ விபத்து நகை, பணம் எரிந்து சாம்பல்
வெவ்வேறு இடங்களில் தீ விபத்து நகை, பணம் எரிந்து சாம்பல்
ADDED : பிப் 20, 2025 07:27 AM
பவானி: ஓலை குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு லட்சம் ரூபாய், 8 பவுன் நகை எரிந்து சாம்பலானது.
அம்மாபேட்டை பி.கே. புதுார் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார், 32, கூலி தொழிலாளி. ஓலை குடிசை அமைத்து, மனைவி ஹெரானா பானுவுடன் வசித்து வருகிறார். வீட்டில் மின் இணைப்பு இல்லாததால், நேற்று முன்தினம் இரவு, சமையல் முடித்த ஹெரானா பானு, விளக்கு பற்ற வைத்து விட்டு உறங்க சென்றார்.
நள்ளிரவில் ஓலை குடிசையில் தீப்பற்றிய நிலையில், வீட்டிலி-ருந்த சிலிண்டர் வெடித்தது. வெளியே படுத்திருந்த தம்பதியினர், சத்தம் கேட்டு எழுந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், ஓலை குடிசை முற்றிலும் தீக்கிரையானது. விபத்தில், பீரோவிலி-ருந்த எட்டு பவுன் தங்க நகை, ஆவணங்கள், ரொக்கம் இரண்டு லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலானது.
அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* கோபி அருகே சிறுவலுரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 40. இவர் அதே பகுதியில், தென்னங்கீற்று கொட்டகையால் வேயப்-பட்ட, எலும்பு முறிவு வைத்தியசாலை நடத்தி வருகிறார். கொட்-டகையில் இருந்து நேற்று மதியம், 2:30 மணிக்கு கரும்புகை-யுடன் தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள், அப்பகுதியினரே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், கொட்டகை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. வைத்தியசாலைக்குள் பற்ற வைத்தி-ருந்த விளக்கு கவிழ்ந்து, தீ விபத்து நடந்திருக்கலாம் என, தீய-ணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
* சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, குமரா-புரி பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்-ளது. இங்குள்ள குமராபுரி குப்பை காட்டில் நேற்று இரவு, 7:30 மணியளவில் தீ பிடித்துள்ளது. சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் சதீஸ்குமார் தலைமையில் சென்ற வீரர்கள் தீயை அணைத்தனர். குப்பை எரிந்ததால் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் சென்னிமலை-ஈரோடு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அந்த வழியாக சென்-றவர் போட்ட சிகரெட் துண்டால், தீ விபத்து ஏற்பட்டு இருக்-கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

