/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இனாம் நில விவசாயிகள் இ.பி.எஸ்.,சிடம் மனு
/
இனாம் நில விவசாயிகள் இ.பி.எஸ்.,சிடம் மனு
ADDED : செப் 13, 2025 01:44 AM
காங்கேயம், மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில், அதிமுக பொது செயலாளர் இ.பி.எஸ்., காங்கேயத்தில் நேற்று முன்தின் இரவு ஈடுபட்டார். இந்நிலையில் ஊதியூர் வழியாக சென்றவரிடம், இனாம் நில விவசாயிகள் மனு அளித்தனர். மனு விபரம்:
கடந்த சில வருடங்களில், குத்தகைதாரர்களாக, வாடகைதாரர்களாக, நயவஞ்சமாக மாற்றப்பட்ட அனைத்து விவசாயிகளின், பொதுமக்களின், குத்தைகளை ரத்து செய்ய வேண்டும். இனாம் ஜமீன் எஸ்டேட் ஒழிப்பின்போது பட்டா பெற்று, அனுபவத்தில் உள்ள மக்களின் நில உரிமையை பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலமும், பூஜ்ஜியம் மதிப்பு செய்வதன் மூலமும் பறிக்கும் பயிற்சியை கைவிட்டு, முறையான சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மக்களின் அறியாமை, அரசின் தவறுகளால், இனாம் ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு நடந்தபோது, பட்டா பெற உரிமை இருந்தும் தவறிய மக்களுக்கு, நில உரிமையை உறுதி செய்து, பட்டா பெறுவதற்கான சட்ட வழிமுறையை, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்கள் போல உருவாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட இ.பி.எஸ்., தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு கவனம் செலுத்தி பிரச்னையை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.
இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு மனை உரிமையாளர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணவேணி உட்பட, 500க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.