/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் கண்காணிப்பு கேமரா திறப்பு
/
காங்கேயத்தில் கண்காணிப்பு கேமரா திறப்பு
ADDED : நவ 11, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி, 16வது வார்டு பகுதி தாராபுரம் சாலை, பல வீதிகளை உள்ளடக்கியது. இப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன், பாரதியார் நகர் மற்றும் சேரன் நகரில் ஒரே நள்ளிரவில், ஏழு வீடுகளில் கொள்ளை நடந்தது.
இதையடுத்து பாரதியார் நகர் பகுதி மக்கள், தங்களின் பாதுகாப்புக்காக தாங்களே முயற்சித்து இரண்டு வீதிகளில், 23 கேமராக்களை அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., மாயவன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், 16வது வார்டு கவுன்சிலர் கமலவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.