ADDED : நவ 15, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நவ. 15-
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் 'மகிழ் முற்றம்' பெயரில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற, ஐந்து குழுக்கள் துவங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் குழுக்கள் தொடங்கப்பட்டு, 'மகிழ் முற்றம்' மாணவ, மாணவிகள் பதவியேற்பு விழா நடந்தது. ஒவ்வொரு குழுவிலும் தலா, 10 மாணவிகள் கொண்டு, குழுவுக்கு ஒரு தலைவர் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர். இக்குழுக்கள் மூலம், மாணவிகளிடையே அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள், ஆளுமை திறன் மேம்பாடு, மாதிரி சட்டமன்றம், மாதிரி பார்லிமென்ட் நடத்தப்படும், என ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.