/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலிங்கியம் பள்ளியில் கலையரங்கம் திறப்பு
/
கலிங்கியம் பள்ளியில் கலையரங்கம் திறப்பு
ADDED : மார் 09, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே கலிங்கியம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 5.80 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கலையரங்கத்தை கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். இதேபோல் நஞ்சை கோபியில் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டியையும் திறந்து
வைத்தார்.
நிகழ்வில் கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ் உட்பட பலர்
பங்கேற்றனர்.

