sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கீழ்பவானியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

/

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கீழ்பவானியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கீழ்பவானியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கீழ்பவானியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 28, 2025 07:45 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக, நீர் திறக்க வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று

நடந்தது. கூட்ட விவாதம் வருமாறு:

கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலர் செ.நல்லசாமி:

தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கி, நீலகிரியில் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை ஒரு வாரத்தில் நிரம்பலாம். கீழ்பவானியில் ஆக., 15ல் தண்ணீர் திறக்க காத்திருக்காமல் முன்னதாக திறக்க வேண்டும்.

அல்லது அணை நிரம்பி வீணாக கடலில் கலக்கும். மாங்காய் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் பாதித்துள்ளனர். அரசு அதனை கொள்முதல் செய்ய, விற்பனை வாய்ப்பு

ஏற்படுத்த வேண்டும்.

மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலர் கே.ஆர்.பழனிசாமி: மேட்டூர் அணைக்கு அதிகமாக தண்ணீர் வருவதால், எங்கள் வாய்க்காலில் ஆக.,1ல் தண்ணீர் திறப்புக்கு பதில் முன்னதாக திறந்து, ஆக.,1 முதல் திறப்பதை மட்டும் கணக்கிடுங்கள். உள்ளாட்சி கழிவு நீர், நீர் நிலைகளில் கலப்பதை தடுக்க வேண்டும். சாய, சலவை ஆலை கழிவும் கலப்பதை தடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பெரியசாமி: நத்தம் நிறுத்த பட்டா பிரச்னை

அதிகம் உள்ளதை தீர்க்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் பயிர் கடன், வேளாண் கடன் வழங்க சிபில் ஸ்கோர் பார்ப்பதால், கடன் பெற முடியவில்லை.

நெல்லுக்கு ஓரளவு கட்டுபடியாகும் விலை கிடைப்பதுடன், கரும்பு, வாழை, மரவள்ளிக்கு விலை கிடைக்காததால் இந்தாண்டு நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. பருவம் தவறி தண்ணீர் திறக்காமல், கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணியை முடித்து தண்ணீர் திறக்க வேண்டும்.

நீர் வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி: கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகள் விரைவுபடுத்தி உள்ளோம். ஆக., 1 அல்லது முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கும் வகையில் பணியை நிறைவு செய்துவிடுவோம். ஆக., 1ல் தண்ணீர் திறக்க கலெக்டர் மூலம் பரிந்துரைக்கலாம்.

டி.ஆர்.ஓ., சாந்தகுமார்: நத்தம் நிறுத்த பட்டாவுக்கு தீர்வு காண, தொடர்ந்து மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கிறோம். முன்னுரிமை தேவை எனில், எங்களை நேரில்

சந்தித்து மனு வழங்கினால் உடன் தீர்வு காணப்படும்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா: பயிர் கடன், கால்நடை கடனுக்கு, 7 சதவீத வட்டி வழங்கி அதை வட்டி மானியமாக மாநில அரசு, 4 சதவீதம், நபார்டு, 3 சதவீதம் திரும்ப தருகிறது. பிற வங்கியில் பயிர் கடன் பெற்றால், 3 சதவீத நபார்டு வழங்கும் வட்டி, கூட்டுறவு வங்கியில் தர

இயலாது.

இது மாநில அளவிலான பிரச்னை. பயிர் கடன் தவிர வேறு கடன் பெற்றிருந்தால், அதே நபர் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்குவது பாதிக்காது.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us