/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு நீர் திறப்பு 2,000 கன அடியாக அதிகரிப்பு

ADDED : நவ 07, 2024 05:53 AM
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள, பவானிசாகர் அணை, 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, பவானிசாகர்
அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 4,326 கன அடியாக இருந்தது.நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 95.38 அடியாகவும், நீர் இருப்பு, 25.2 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு, 1,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று முதல் நீர் திறப்பு, 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.