/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகர், மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்
/
மாநகர், மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்
ADDED : ஆக 16, 2024 05:23 AM
ஈரோடு: ஈரோடு மாநகர், மாவட்டத்தில், 78வது இந்திய சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தினவிழா, ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
விழாவில், 86 சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவம் செய்யப்பட்டது. போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 96 அலுவலர்களுக்கு கலெக்டர் நற்சான்றிதழை வழங்கினார். பல்வேறு துறை சார்பில், 31 பயனாளிகளுக்கு, 22.௬௦ லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டம் வழங்கப்பட்டது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த, 515 மாணவ, மாணவியர் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது.
* பா.ஜ., தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடியேற்றினர். பின்னர் பச்சபாளியில் இருந்து ஈரோடு காளை மாட்டு சிலை வரை டூவீலர் பேரணி நடந்தது. இதில் மாவட்ட தலைவர் வேதானந்தம், கரூர் மாவட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ஈரோடு மாநகராட்சியில் மேயர் நாகரத்தினம் தேசிய கொடியை ஏற்றினார். ஈரோடு மாவட்ட நீதித்துறை சார்பில் ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி முருகேசன் தலைமை வகித்தார்.
கோபியில்...
கோபி யூனியன் ஆபீசில், எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தேசியக்கொடி ஏற்றினார். சேர்மன் மவுதீஸ்வரன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., ஆபீசில் ஆர்.டி.ஓ., கண்ணப்பன் தேசியகொடியேற்றினார். இதேபோல் கோபி நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் நாகராஜ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அந்தியூரில்...அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் வளர்மதி தேவராஜ், சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் ஜெகதீஸ்வரன், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கவியரசு, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், அரசு மருத்துவமனையில் டாக்டர் கவிதா, டவுன் பஞ்., அலுவலகத்தில் தலைவி பாண்டியம்மாள் தேசியக்கொடி ஏற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், செயலாளர் கலைவாணி விஜயகுமார் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் டூவீலரில் தேசியக்கொடி கட்டிக்கொண்டு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானாவில் இருந்து தீயணைப்பு நிலையம் வரை பேரணியாக சென்றனர்.
கொடுமுடியில்...கொடுமுடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலமுருகாயி, கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் திலகவதி சுப்ரமணியம் தேசியக்கொடி ஏற்றினர். கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப்பெருமாள் கோவிலில், சமபந்தி விருந்து நடந்தது. சென்னசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பத்மா குழந்தைவேலு, கொடுமுடி போலீஸ் ஸ்டேசனில் எஸ்.ஐ., அப்பாதுரை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் உதவி கோட்ட பொறியாளர் மூர்த்தி தேசியக்கொடி ஏற்றினர்.
சென்னிமலையில்...சென்னிமலையில் பிறந்து விடுதலை போரில் உயிர் தியாகம் செய்த கொடி காத்த குமரன் சிலைக்கு, சென்னிமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணை தலைவர் சவுந்தரராஜன், செயல் அலுவலர் மகேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பல்வேறு சமூக நல அமைப்பினர், தியாகி குமரன் பேரவை நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
பெருந்துறையில்...பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி பஞ்., மாதம்பாளையம் கிராமத்தில் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டார். தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறை கேட்டறிந்தார். இருவருக்கு மருந்து பெட்டகம், இரு கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

