/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாய்க்கடி தொடர்பாக 36 லட்சம் ரூபாய் இழப்பீடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் தகவல்
/
நாய்க்கடி தொடர்பாக 36 லட்சம் ரூபாய் இழப்பீடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் தகவல்
நாய்க்கடி தொடர்பாக 36 லட்சம் ரூபாய் இழப்பீடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் தகவல்
நாய்க்கடி தொடர்பாக 36 லட்சம் ரூபாய் இழப்பீடு வேளாண் குறைதீர் கூட்டத்தில் தகவல்
ADDED : நவ 22, 2025 02:16 AM
ஈரோடு, ந ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜன. 26 முதல் அக்., 30 வரை, நாய்க்கடி தொடர்பாக, 36 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம் என்று, வேளாண் குறைதீர் கூட்டத்தில், கால்நடைத்துறை அதிகாரி தகவல்
தெரிவித்தார்.
ஈரோடு கலெக்டர் கந்த
சாமி தலைமையில், வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெரியசாமி: நகரம், கிராமங்களில் நாய்கள் அதிகரிக்க பல காரணம் உண்டு. இறைச்சி கழிவு, ேஹாட்டல் கழிவை ரோட்டோரம் கொட்டுவதால் அதிகரிக்கிறது.
கால்நடை துறை அதிகாரி: ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் விரைவில் துவங்க உள்ளோம். ஜன. 26 முதல் அக்., 30 வரை, நாய்க்கடி தொடர்பாக, 36 லட்சம் ரூபாய் இழப்பீடு அரசிடம் கோரி உள்ளோம்.
பவானி ஆறு, தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி தளபதி: வேளாண் கூட்டத்தில் தெரிவிக்கப்படும், மனுவாக வழங்கப்படும் நியாயமான, நேர்மையான கோரிக்கைக்கு கூட 'பரிசீலிக்கப்படுகிறது' என்று மட்டுமே அதிகாரிகள் பதில் தருகின்றனர். எத்தனை மாதம் ஆனாலும் நடவடிக்கை இல்லை. எங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில், புதிய கோரிக்கை
தெரிவிக்கவில்லை எனக்கூறி வெளியேறினார்.
கலெக்டர்: பெறப்படும் மனு, கோரிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மனு நடவடிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும்.
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு: கீழ்பவானி வாய்க்கால், இரண்டா2ம் போகத்துக்கு ஜன.,7 க்குள் தண்ணீர் திறந்து ஏப்., 30 வரை தடையின்றி நீர் விட வேண்டும். விவசாயிகள் தயாராக டிச.,ல் அறிவிப்பும் வெளியிட வேண்டும்.
நீர் வளத்துறை செயற்
பொறியாளர் திருமூர்த்தி: கீழ்பவானியில் ஜன., முதல் வாரம் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். டிச., மாதம் விவசாயிகளுக்கு அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி: கீழ்பவானியில் டிச.,ல் நெல் அறுவடை துவங்கும். கடந்தாண்டு போல, 39 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.
நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி: கீழ்பவானியில் நெல் அறுவடை துவங்கியதும், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். குளூர், அஞ்சூரில் கொள்முதல் நிலையத்துக்கு சொந்த கட்டடம் தலா, 35 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

