/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
/
கோவில் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஜூலை 22, 2025 01:30 AM
ஈரோடு, பவானி, ஜம்பை, துருசாம்பாளையம் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: எங்களது ஊரில் பட்டா நிலத்தில் கருப்புசாமி கோவில் உள்ளது. இங்குள்ள வெவ்வேறு சமுதாயத்தினர் வழிபாடு செய்கின்றனர்.
பல்வேறு நிகழ்வுகளுக்கு இடையே திருவிழா நடத்தி வந்தோம். அப்போது பூஜை செய்த ஒரு சமூகத்தினர், அதை விட்டு சென்றனர். வேறு இடத்தில் சின்ன கருப்புசாமி கோவில் என உருவாக்கி, அங்கு வழிபாடுகளை தொடர்ந்தனர். இருப்பினும் இங்குள்ள கோவில் பூஜை, திருவிழா தொடர்ந்தது.
கடந்த வாரம் ஒரு தரப்பினர் கோவிலில் நுழைந்து பூட்டு போட்டு, திருவிழா நடத்த விடாமல் செய்கின்றனர். இதுபற்றி புகாரின் பேரில், பவானி போலீசார், தாசில்தார் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றனர்.
திருவிழா நடத்த விடாமல் தடுக்கும் வகையில் சிலர் செயல்படுவதால், போலீசார், வருவாய் துறையினர் தலையிட்டு, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். கோவிலை பூட்டி, தகராறில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.