/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செயற்கை இழை நுாலுக்கான வரியை குறைக்க வலியுறுத்தல்
/
செயற்கை இழை நுாலுக்கான வரியை குறைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2025 04:29 AM
ஈரோடு:தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், செயலர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில்,
20 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரடியாக, மறைமுகமாக
வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அமெரிக்காவின், 50 சதவீத வரி விதிப்பால்
விசைத்தறி தொழிலும் பாதிக்கிறது. விசைத்தறியை காக்க, ஏற்றுமதி
செய்வோருக்கு சலுகை அறிவிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., அறிமுகம்
செய்தபோது செயற்கை இழை நுாலுக்கு, 18 சதவீத வரி விதிக்கப்பட்டது.
கோரிக்கைப்படி, 12 சதவீதமானது. செயற்கை இழை துணிகளை
விற்கும்போது, 5 சதவீத விற்பனை வரி விதித்து விற்கப்படுகிறது.
உள்ளீட்டு வரி எடுக்கும்போது, 12 சதவீதத்தில், 5 சதவீதம் போக, 7
சதவீத வரியை, 3, 4 மாதங்களுக்கு மேலாகியும் எடுக்க முடியவில்லை. வரி
இருப்பாகவே தொடர்கிறது.
எனவே செயற்கை இழை நுாலுக்கு, 5 சதவீதமாக வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

