/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.எஸ்.டி.,யில் கடின வரி மாற்றி கொள்ள வலியுறுத்தல்
/
ஜி.எஸ்.டி.,யில் கடின வரி மாற்றி கொள்ள வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி.,யில் கடின வரி மாற்றி கொள்ள வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி.,யில் கடின வரி மாற்றி கொள்ள வலியுறுத்தல்
ADDED : ஆக 21, 2024 02:47 AM
ஈரோடு;ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கத்துக்கான (ஈடிசியா) பொதுக்குழு கூட்டம், தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. ஆண்டறிக்கையை செயலாளர் சுரேஷ் படித்தார்.தமிழக ஜி.எஸ்.டி., அலுவலர்களால் வாகன தணிக்கையின்போது சிறிய எழுத்து பிழை, தவறுகளுக்கும் கடினமான வரி விதிப்பு செய்வதையும், சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மாவட்டம் தோறும் ஜி.எஸ்.டி., அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் பால் சார்ந்த தொழில் அதிகம் உள்ளதால், கால்நடை பராமரிப்பு, சிகிச்சை, ஆராய்ச்சிக்காக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் அல்லது கால்நடை கல்லுாரி அமைக்க வேண்டும். மீனாட்சிசுந்தரனார் சாலையில் இருந்து, 80 அடி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.