/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிழக்கு தொகுதி இ.வி.எம்.,கள் ஆய்வு
/
கிழக்கு தொகுதி இ.வி.எம்.,கள் ஆய்வு
ADDED : ஜன 03, 2025 01:31 AM
கிழக்கு தொகுதிஇ.வி.எம்.,கள் ஆய்வு
ஈரோடு, ஜன. 3-
ஈரோடு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ., இளங்கோவன் சமீபத்தில் இறந்ததால், விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், இடைத்தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இதன்படி நேற்று மாலை கிழக்கு தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் வைக்கப்பட்டுள்ள, மாநகராட்சி அலுவலக அறையை மாநகராட்சி ஆணையர் மற்றும் கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான மணீஷ் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இருந்தனர். ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், கூடுதலாகவும் இருப்பு வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் விபரத்தை பதிவு செய்து கொண்டனர்.