/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண்காணிப்பு அலுவலர் உரக்கிடங்கில் ஆய்வு
/
கண்காணிப்பு அலுவலர் உரக்கிடங்கில் ஆய்வு
ADDED : ஜூலை 27, 2024 01:14 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையாளர் மணிஷ் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் சென்னையில் இருந்து வந்த கண்காணிப்பு அலுவலர் அனிஷ் சோப்ரா, மாநகராட்சியில் நடந்த வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.இதை தொடர்ந்து வைராபாளையத்தில் உள்ள உரக்கிடங்கில், உரம் தயாரிக்கும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டார். நேரு வீதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், குடிநீரின் தரம் மற்றும் குடிநீரின் அளவு குறித்து சோதனை மேற்-கொண்டார்.பின்னர் மாநகராட்சி, 17வது வார்டு நேரு வீதி, 20வது வார்டு குமிலன்குட்டை, 19வது வார்டு கணபதி நகர், 39வது வார்டு சேக்-கிழார் வீதி உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, தெரு விளக்குகள் குறித்து அவர் ஆய்வு மேற்-கொண்டார். அவருடன் ஆணையாளர் மணீஷ், தலைமை பொறி-யாளர் விஜயகுமார், மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.

