/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க கோரி 15 ஆயிரம் பேருக்கு தபால் அனுப்பும் பணி தீவிரம்

ADDED : செப் 29, 2024 01:11 AM
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க கோரி
15 ஆயிரம் பேருக்கு தபால் அனுப்பும் பணி தீவிரம்
கோபி, செப். 29-
கோபி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பெயர் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களின் பெயரை நீக்க வலியுறுத்தி, தபால் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், பெயர் உள்ளவர்களை கண்டறிந்து, அதை சம்பந்தப்பட்ட வாக்காளர், ஏதாவது ஒரு முகவரியை தானாகவே, நீக்கி கொள்ளும்படி, அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகம் மூலம் தபால் அனுப்பும் பணி நடக்கிறது. அதன்படி, கோபி சட்டசபை தொகுதியில் உள்ள, 296 ஓட்டுச்சாவடிகளில், 2.56 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் மொத்தம், 15 ஆயிரம் பேர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பெயர் உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
வாக்காளரின் சம்மதத்துடன், வாக்காளர் பட்டியலில் இருந்து, பெயர் மற்றும் போட்டோவை நீக்கம் செய்ய வலியுறுத்தி, 15 ஆயிரம் பேருக்கும், தபால் அனுப்பும் பணி, கோபி தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது. மேலும் இது சம்பந்தமாக, ஓட்டுச்சாவடி வாரியாக, கடிதம் அனுப்பியுள்ள வாக்காளரின் வீடுகளுக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கள ஆய்வுக்காக முடுக்கி விடப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.