/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம், தாராபுரத்தில் சர்வதேச யோகா தினம்
/
காங்கேயம், தாராபுரத்தில் சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 22, 2025 01:18 AM
காங்கேயம், சர்வதேச யோகா தினமான நேற்று, காங்கேயம் நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகள் சந்தன கிருஷ்ணசாமி, செல்வி தேன்மொழி முன்னிலையில் யோகாசனம் செய்யப்பட்டது. அரசு வழக்கறிஞர் முருகேசன், வழக்கறிங்க சங்க தலைவர் மோகன்குமார், வட்ட சட்டப்பணிகள் குழுவினர், முன்னாள் சங்க நிர்வாகி செல்வக்குமார், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மாணவ கலை மன்ற நிர்வாகிகள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாராபுரத்தில்...
தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன் மற்றும் சார்பு நீதிபதி சக்திவேல், உரிமையியல் நீதிபதி பாண்டி மகாராஜா, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் நீதிமன்ற
பணியாளர்கள், வழக்கறிஞர்கள் யோகாசனம் செய்தனர்.