/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவேரிப்பட்டணம் அரசு பள்ளியில் பூஜ்ய கழிவுகளின் சர்வதேச தினம்
/
காவேரிப்பட்டணம் அரசு பள்ளியில் பூஜ்ய கழிவுகளின் சர்வதேச தினம்
காவேரிப்பட்டணம் அரசு பள்ளியில் பூஜ்ய கழிவுகளின் சர்வதேச தினம்
காவேரிப்பட்டணம் அரசு பள்ளியில் பூஜ்ய கழிவுகளின் சர்வதேச தினம்
ADDED : மார் 31, 2024 04:24 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பூஜ்ய கழிவுகளின் சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை வகித்து பேசியதாவது:
பூஜ்ஜிய கழிவுகளின் சர்வதேச தினம், மார்ச், 30ல் கடைபிடிக்கப்படுகிறது. நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளை பின்பற்றுவதற்காகவும், கழிவு மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நிகர பூஜ்யம் அல்லது கார்பன் நடுநிலையாக மாறுதல், வளிமண்டலத்திலுள்ள பசுமை இல்ல வாயுக்களின் அளவை கூட்டாமல் இருத்தல், குறைந்தளவு கார்பன் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், இந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புவி வெப்பமாதலை குறைக்க, பள்ளியில் மரம் நடுதல் பணி ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளை கொண்டாடும் விதமாக மாணவியரின் பெற்றோர்களுக்கு மகோகனி, இலுப்பை, புங்கன், பாதாம், பூவரசன், மற்றும் நீர்மருது உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றது. மரங்கள் மட்டுமே கரியமில வாயுவை சுவாசிக்கும் தன்மை கொண்டவை. இவை கரியமில வாயுவை உட்கிரகித்து ஆக்சிஜனை வெளி விடுகின்றது. இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவும், புவி வெப்பமயமாதலும் குறையும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவியரின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முதுகலை ஆசிரியை அனிதா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

