ADDED : அக் 22, 2026 06:53 AM
ஈரோடு:தமிழகம்
முழுவதும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக அவசர கால மருத்துவ உதவியாளர்,
ஓட்டுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
இரு
பணிக்கும் தலா, 100 பேர் என, 200 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மருத்துவ கால உதவியாளர் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங், ஏ.என்.எம்., -
ஜி.என்.எம்., - டி.எம்.எல்.டி., - பார்மஸி, அறிவியல் பட்டப்படிப்பு
முடித்த, 19 முதல், 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாதம்,
21,320 ரூபாய் ஊதியம். ஓட்டுனர் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி,
ஓட்டுனர் உரிமம் பெற்ற, 162.5 செ.மீ., உயரமுள்ள, 24 முதல், 35 வயதுக்கு
உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாதம், 21,120 ரூபாய் ஊதியம்.
இப்பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும், 24, காலை, 10:00 முதல் மதியம்,
2:00 மணி வரை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை,
நேர்காணலும், டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு,
ஓட்டுனர் தேர்வு, நேர்காணலும் நடக்கும்.தகுதி சான்று, அசல்
ஓட்டுனர் உரிமம், பிற ஆவணங்கள் எடுத்து வர வேண்டும். கூடுதல் விபரத்தை,
8925941282, 044 28888060 என்ற எண்ணில் அறியலாம்.
