/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 சதவீத தேர்ச்சி 116 பள்ளிகளுக்கு அழைப்பு
/
100 சதவீத தேர்ச்சி 116 பள்ளிகளுக்கு அழைப்பு
ADDED : செப் 03, 2025 12:52 AM
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற, 116 பள்ளிகளுக்கு பாராட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்தது. தேர்வு முடிவு மேயில் வெளியானது. இதில் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து சான்று வழங்க வரும், 7ல் திருச்சியில் நடக்கும் விழாவுக்கு, பள்ளி கல்வி துறை அழைத்துள்ளது. இதன்படி பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டத்தில், 37 அரசு பள்ளிகள், 4 அரசு நிதியுதவி பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில், 63 அரசு பள்ளிகள், 12 அரசு நிதியுதவி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன.
இதேபோல் பிளஸ் 2வில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 12 மாணவ, மாணவிகள் தமிழில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களுக்கும் திருச்சியில், 7ல் பாராட்டு விழா நடக்கிறது.