ADDED : செப் 21, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி மார்க்கெட் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி வசந்த-குமார், 28; அம்மாபேட்டை அருகே பி.கே.புதுாரில் தாத்தா வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்பகுதியில் தனக்கு பழக்கமான ஒரு பெண்ணை பார்க்க, பத்து நாட்களுக்கு முன், இரவில் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது பெண்ணின், 16 வயது மகளுக்கு முத்தம் கொடுக்க முயன்-றுள்ளார். மாணவி சத்தமிடவே அவரது தாய் எழுந்து வசந்தகு-மாரை கண்டித்தார். அப்போது கத்தியால் பெண்ணை வசந்த-குமார் தாக்கினார்.
அப்பெண்ணின் புகார்படி அம்மாபேட்டை போலீசார் வழக்குப்-பதிவு செய்து, வசந்தகுமாரை தேடி வந்தனர். பவானியில் நேற்று கைது செய்தனர்.
பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.