/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பந்தேஸ்வரர் கோவிலில் ஜலக்கா பண்டிகை
/
பந்தேஸ்வரர் கோவிலில் ஜலக்கா பண்டிகை
ADDED : ஜன 03, 2026 07:45 AM
அந்தியூர்: பர்கூர்மலையில் உள்ள தேவர்மலை பந்தேஸ்வரர் கோவிலில் நேற்று ஜலக்கா (நீராட்டு) பண்டிகை நடந்தது. ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமி நாளில் இந்த பண்டிகை நடக்கும். இதன்படி நேற்று காலை கோவிலில் இருந்து பந்தேஸ்வரர், வனத்தில் உள்ள ஓடைக்கு புனித நீராட்டுக்கு கொண்டு செல்லப்-பட்டன.
இதையடுத்து பேட கம்பள லிங்காயத் பட்டக்காரர்கள், பூசாரிகள் முன்னிலையில் நீராட்டு நடந்தது. தொடர்ந்து எலச்சியபாளையம் வழியாக கொண்டு கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் தேவர்மலை, எலச்சி-பாளையம், கல்வாரை, பெஜ்லட்டி, ஈரட்டி, தாமரைக்கரை உள்-ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.

