/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
/
தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : டிச 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந் தவர் பாலமுருகன், 58; தொழிலாளி. இவர் மனைவி சற்குணா. இருவரும் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வந்தனர். முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து, வீட்டுக்குள் சென்று பார்த்தனர். வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.
சந்தேகத்தில் பீரோவை திறந்து பார்த்த போது இரண்டு பவுன் நகை, ௧.40 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி சூரம்பட்டி போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.