/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கம்பி வேலியில் கார்மோதி சிறுவன் சாவு
/
கம்பி வேலியில் கார்மோதி சிறுவன் சாவு
ADDED : நவ 29, 2025 01:36 AM
காங்கேயம், திருவண்ணாமலை, ஓம்சக்தி நகரை சேர்ந்த ராஜசேகர் மனைவி சத்தியா, 35; கணவர் இறந்து விட்டார். இவரின் மகன் கோபாலகிருஷ்ணன், 10; மகனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் திருப்பூர் அருகே கொடுவாயிர் சிகிச்சைக்காக சிப்ட் காரில் அழைத்து வந்தார்.
அவர்களுடன் பாட்டி எல்லம்மாள், தாய் மாமன் அசோக் வந்தனர். களத்துபாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் காலை ஓட்டினார். ஈரோடு-தாராபுரம் ரோட்டில் நாட்டார்பாளையம் பகுதியில் நேற்று வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர கம்பி வேலியில் மோதியது. இதில் சிறுவன் கோபாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்தான். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தான். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

