/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கார்த்திகை தீப திருவிழா; அகல் விளக்கு விற்பனை ஜோர்
/
கார்த்திகை தீப திருவிழா; அகல் விளக்கு விற்பனை ஜோர்
கார்த்திகை தீப திருவிழா; அகல் விளக்கு விற்பனை ஜோர்
கார்த்திகை தீப திருவிழா; அகல் விளக்கு விற்பனை ஜோர்
ADDED : டிச 06, 2024 07:44 AM
ஈரோடு: வரும், 13ல் கார்த்திகை திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி, வண்ண கோலமிட்டு, அதில் வைத்து வழிபடுவதை சிறப்பாக கருதுகின்றனர்.
தற்போது, ஈரோட்டில் மீனாட்சிசுந்தரனார் சாலை, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தப்பகுதி, கொல்லம்பாளையம் ரயில்வே பால நுழைவு பகுதி, நாடார் மேடு செல்லும் சாலைப்பகுதி உட்பட பல இடங்களில் அகல் விளக்குகள் விற்பனை செய்து வருகின்றனர்.
அகல் விளக்கு விற்பனை செய்வோர் கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மண் அகல் விளக்குகள் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்காக வருகிறது. இங்கு, 6 சிறிய மண் விளக்குகள், 10 ரூபாய் முதல், 50 ரூபாய் வரையிலும், 2 லிட்டர் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்கும் அளவிலான மண் விளக்கு, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவை, கோவில்கள், பெரிய நிறுவனங்கள், பொது இடங்களில் ஏற்றுவதற்காக வாங்கி செல்வர். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு சில நாட்களே உள்ளதால், பெண்கள் ஆர்வமுடன் அகல் விளக்குகளை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு கூறினர்.