/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணை மூடல் பயணிகளுக்கு இன்று முதல் தடை
/
கொடிவேரி தடுப்பணை மூடல் பயணிகளுக்கு இன்று முதல் தடை
கொடிவேரி தடுப்பணை மூடல் பயணிகளுக்கு இன்று முதல் தடை
கொடிவேரி தடுப்பணை மூடல் பயணிகளுக்கு இன்று முதல் தடை
ADDED : ஜூலை 27, 2025 01:37 AM
கோபி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால் குளிக்கும் வசதி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை, 99 அடியை எட்டியது. விரைவில், 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது. இதனால் பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி நீர், 3,000 கன அடி முதல், ௧௦ ஆயிரம் கன அடி வரை திறக்க வாய்ப்புள்ளது.
இதனால் பவானி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி தடுப்பணையில் இன்று (27ம் தேதி) முதல் சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க, பரிசல் பயணம் செல்ல நீர்வள ஆதாரத்துறையினர்
தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொடிவேரி தடுப்பணை ஜூலை 27ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படுகிறது' என்றார்.