ADDED : அக் 25, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, தொடர் மழையால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், தடுப்பணை பகுதியில் கொட்டிய மழையாலும், கொடிவேரியில் கடந்த, 19ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை, 6:00 மணிக்கு, பவானிசாகர் அணை உபரிநீரும், மழைநீரும் சேர்ந்து, 4,357 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேறியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆறாவது நாளாக நேற்றும் தடை நீடிக்கப்பட்டது.

