/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மைலம்பாடியில் 27ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
/
மைலம்பாடியில் 27ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
ADDED : அக் 25, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானி அருகே மைலம்பாடியில், கவின்கேர் நிறுவன கூட்டரங்கில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ.சி., இணைந்து, மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தை வரும், 27ல் நடத்துகிறது.
மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சுதர்சன் ராவ், மாவட்ட அமலாக்க அதிகாரி சரவணகுமார் முன்னிலையில் நடக்கிறது. சந்தாதாரர்கள், தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, கோரிக்கைகளை தீர்வு காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

