ADDED : பிப் 02, 2026 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு; ஈரோடு மணிக்கூண்டு அருகில் உள்ள கொங்க-லம்மன் கோவிலில் நடப்பாண்டு தைப்பூச தேர் திருவிழா கடந்த மாதம், 23ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் நேற்று நடந்-தது. முன்னதாக காலையில் திருத்தேர் அலங்-காரம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தேருக்கு கொண்டு வரப்-பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின் காலை, 8:45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, பொன்வீதி, காரைவாய்க்கால், பெரியார் மன்றம் வழியாக சென்று மீண்டும் மணிக்கூண்டு வழியாக கோவில் முன் தேர் நிலை சேர்ந்தது. நுாற்றுக்க-ணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

