/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருது
/
கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருது
கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருது
கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருது
ADDED : மே 08, 2025 01:41 AM
பெருந்துறை,
தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட குழுமத்தின் சார்பில், மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2018-2023 ஆண்டுகளுக்கான மாநில விருது வழங்கும் விழா, சென்னை கல்லுாரி கல்வி இயக்ககத்தில் நடந்தது. பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியின் நலப்பணித் திட்ட அலுவலர் பரமேஸ்வரனுக்கு, 2018--19ம் ஆண்டிற்கான மாநில அளவில் சிறந்த திட்ட அலுவலர் விருதையும், மெக்ட்ரானிக்ஸ் துறை மாணவன் எழிலரசன், 2021--22ம் ஆண்டின் மாநில அளவில் சிறந்த நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான விருதையும் பெற்றனர்.
கல்லுாரி கல்வி இயக்ககத்தின் ஆணையர் சுந்தரவல்லி விருது வழங்கி பாராட்டினார். விருது பெற்ற நலப்பணித் திட்ட அலுவலர் பரமேஸ்வரன், மாணவன் எழிலரசனுக்கு, கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர்கள், கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம், முதல்வர் ராகவேந்திரன், துணை முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.