/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக ஆண்டு விழா
/
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக ஆண்டு விழா
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக ஆண்டு விழா
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : ஜூன் 04, 2025 12:59 AM
ஈங்கூர், சென்னிமலை அருகே ஈங்கூரில், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தில் 'ஈஞ்சன் குல' மக்களின் குலதெய்வ கோவிலான தம்பிராட்டி அம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்நிலையில் நாளை கும்பாபிஷேக முதலாமாண்டு விழா நடக்கிறது.
காலை, 6:௦௦ மணி தொடங்கி மதியம், 2:௦௦ மணி வரை விழா நடக்கிறது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், உட்பட கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப் படுகிறது.
விழாவை அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் கபாலீஸ்வர சிவாச்சாரியார், ஈரோடு செந்தில்நாத சிவாச்சாரியார் குழுவினர் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை தம்பிராட்டி அம்மன் கோவில் நிர்வாக குழுவினர், ஈஞ்சன் குல பங்காளிகள் செய்து வருகின்றனர்.