ADDED : பிப் 05, 2026 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, திருநகர் காலனி அருகே உள்ள பம்பிங் ஸ்டேஷன் ரோட்டில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர், சந்தன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதையடுத்து நவகிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், ப்ரவேச பலி, வாஸ்து சாந்தி பூஜை, காவிரி தீர்த்தம் எடுத்தல், தீர்த்த சங்க்ரஹணம், முதலாம் கால யாக பூஜை போன்ற பல்வேறு
நிகழ்ச்சிகள் நடந்தன.
அதை தொடர்ந்து, இன்று இரண்டு, மூன்றாம் கால யாக பூஜை, சந்தன மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு யந்தர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்றவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழச்சியான மஹா கும்பாபிஷேக விழா, நாளை காலை, 9:00 மணி முதல் 10:00க்குள் கும்பாபிஷேக விழா கோலகலமாக நடக்கிறது.

