/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய கையுந்து பந்து போட்டிக்கு குமுதா பள்ளி மாணவர்கள் தேர்வு
/
தேசிய கையுந்து பந்து போட்டிக்கு குமுதா பள்ளி மாணவர்கள் தேர்வு
தேசிய கையுந்து பந்து போட்டிக்கு குமுதா பள்ளி மாணவர்கள் தேர்வு
தேசிய கையுந்து பந்து போட்டிக்கு குமுதா பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : நவ 14, 2025 01:19 AM
ஈரோடு இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும், தேசிய கையுந்து பந்து போட்டி நடக்கிறது. இதற்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு போட்டி திருச்சி மாவட்டத்தில் நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து, மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவில் நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் ௧ மாணவன் சந்தோஷ், பெண்கள் பிரிவில் பிளஸ் ௨ மாணவிகள் யோகிஸ்ரீ, ரித்திகா தேர்வு செய்யப்பட்டனர். உ.பி., மாநிலம் பரேலியில் நடக்கும் போட்டியில் விளையாடுவர்.
இதேபோல், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு போட்டியில், குமுதா பள்ளி பிளஸ் ௨ மாணவன் முகமது ரபி, பெண்கள் பிரிவில் பிளஸ் ௨ மாணவி பிரீத்தி தேர்வாகினர். இவர்கள் ம.பி., மாநிலத்தில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்பர்.
தேசிய போட்டிக்கு தேர்வு பெற்ற ஐந்து பேரையும், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார் பாராட்டினார். பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.

