/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
/
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED : நவ 14, 2025 01:19 AM
சென்னிமலை, சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு தேரோட்டம் நேற்று காலை, 7:20 மணிக்கு தொடங்கியது.
உற்சவர் அம்மனுக்கு மகா அபிஷேகத்தை தொடர்ந்து, 8:10 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் திரளான பெண்கள், பொங்கல் வைத்து, ஆடு-கோழி பலியிட்டு வழிபட்டனர். மாலையில் குழந்தைகள் உடலில் சேறு பூசி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 5:20 மணிக்கு மீண்டும் வடம் பிடிக்கப்பட்டு தேர் நிலை சேர்ந்தது.
இரவில் மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதியுலா காட்சி நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைகிறது.

