/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் டயர் வெடித்ததில் கூலி தொழிலாளி சாவு
/
பைக் டயர் வெடித்ததில் கூலி தொழிலாளி சாவு
ADDED : ஜூலை 11, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சேலம் மாவட்டம் பாலமலை, சந்தனபாலிகாட்டை சேர்நதவர் அண்ணாமலை, 30; கூலி தொழிலாளி. திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. இவரின் உறவினர் தங்கராஜ், 29; அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரில் ஜாதகம் பார்த்துவிட்டு பைக்கில், நேற்று முன்தினம் மாலை, இருவரும் சென்றனர்.
கண்ணாமூச்சி ரோட்டில் ஓலையூர் அடுத்த தார்க்காடு அருகே, பைக் முன் டயர் வெடித்ததில் இருவரும் சாலையில் விழுந்தனர். தலையில் பலத்த காயமடைந்த அண்ணாமலை, அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.