/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ-பைலிங் முறை ரத்து கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம்
/
இ-பைலிங் முறை ரத்து கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம்
ADDED : டிச 17, 2025 07:21 AM

ஈரோடு: தமிழக நீதிமன்றங்களில் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யும், இ-பைலிங் முறை நடைமுறைக்கு வந்துள்-ளது. இதை வரவேற்பதாக தெரிவிக்கும் வக்கீல்கள், இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதி, சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பிறகு அமல்படுத்த வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடு-பட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலையில் இம்முறையை ரத்து செய்ய வேண்டும். சிக்கல்களை தவிர்த்து, சிறந்த முறையில் அமலாக்க வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிப-திகளுக்கும், கடிதம் அனுப்பும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்-டனர். இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள போஸ்ட் ஆபீ-ஸுக்கு வந்து கடிதம் அனுப்பினர். ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் சரத்சந்தர், செயலர் பிரகாஷ், பொருளாளர் கவிதா, ஜாக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுவர்த்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

