/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றில் கழிவு கலப்பு தடுக்க முதல்வருக்கு கடிதம்
/
பவானி ஆற்றில் கழிவு கலப்பு தடுக்க முதல்வருக்கு கடிதம்
பவானி ஆற்றில் கழிவு கலப்பு தடுக்க முதல்வருக்கு கடிதம்
பவானி ஆற்றில் கழிவு கலப்பு தடுக்க முதல்வருக்கு கடிதம்
ADDED : ஜூன் 20, 2025 01:37 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டம், கோபி கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதி, தமிழக முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், ஈரோடு கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பிய மனு:
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சிகள், 12 டவுன் பஞ்.,கள், 44 பஞ்.,க்கள் வழியாக செல்லும் பவானி ஆற்றில், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. தண்டனைக்குரிய குற்றம் என அறிந்தும் செயல்படுத்துகின்றனர்.
தொழிற்சாலை, வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்களும் கழிவுநீரை கலக்கின்றனர். பவானி ஆற்றில், 16 கூட்டுக்குடிநீர் திட்டங்கள், 46 தனி குடிநீர் திட்டங்கள் வாயிலாக தினமும், 30 கோடி லிட்டர் நீரை மக்களுக்கு வினியோகிக்கின்றனர்.
காளிங்கராயன் அணை, கொடிவேரி அணை, கீழ்பவானி பாசனத்துக்கு உட்பட்ட பகுதியில், 3 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பயன்பெறுகின்றன. இச்சூழலில் பவானி ஆற்றில் மாசு, கழிவுநீர், திடக்கழிவு கலப்பதை தடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சில ஆலைக்கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என அறிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தென்னிந்தியாவின் முதல் மூன்று மாசடைந்த ஆறுகளில் ஒன்றாக பவானி ஆறு மாறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.