நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலக்கிய திருவிழா
கோபி, ஜன. 4-
ஈரோடு மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், இளைஞர் இலக்கியத் திருவிழா கோபியில் நேற்று நடந்தது. கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட நுாலக அலுவலர் யுவராஜ், கோபி கிளை நுாலகத்தின் முதல்நிலை நுாலகர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இரண்டு நிமிட பேச்சுப்போட்டி, இலக்கிய வினாடி வினா போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, நுால் அறிமுகப்போட்டி, விவாதமேடை, படத்தொகுப்பு உருவாக்கம் என பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், 120 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.