ADDED : செப் 21, 2024 07:23 AM
* ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நடந்தது. 20க்கும் மேற்-பட்ட விவசாயிகள்,
42 கிலோ எடையில், 80 மூட்டை கொண்டு வந்தனர். காய்ந்தது முதல் தரம், 69 ரூபாய் முதல், 71.10 ரூபாய்; இரண்டாம் ரகம், 66 ரூபாய் முதல்,
68 ரூபாய் வரை ஏலம் போனது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 51 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 121.60
ரூபாய் முதல், 122.99 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 91.11 ரூபாய் முதல், 11௩ ரூபாய் வரை, 1,586 கிலோ கொப்பரை, 1.௮1 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது.* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்றவு நடந்த எள் ஏலத்துக்கு, 294 மூட்டை எள் வரத்தானது. கருப்பு எள் கிலோ, 102.9௦
ரூபாய் முதல், 158.9௦ ரூபாய்; சிவப்பு எள் கிலோ, 114.23 ரூபாய் முதல், 153.63 ரூபாய் வரை, 21,965 கிலோ எள், 29 லட்சத்து, 72,343 ரூபாய்க்கு
விற்பனையானது.* கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு
சர்க்கரை, முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,930 ரூபாய் முதல், 2,940 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம்( மீடியம்), 2,840 ரூபாய்
முதல், 2,860 ரூபாய் வரை ஏலம்போனது. வரத்தான, 2,182 நாட்டு சர்க்கரை மூட்டை-களும், 62 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை
வெல்லம், 100 மூட்டைகளில் (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,590 ரூபாய் முதல், 1,650 ரூபாய் என, 1.62 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்-லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 63.67 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக,
விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.