ADDED : அக் 13, 2024 08:40 AM
* ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடை
கொண்ட, 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,270 ரூபாய் முதல், 1,400 ரூபாய்
வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,800 மூட்டைகளில் வரத்தாகி, ஒரு மூட்டை, 1,380
ரூபாய் முதல், 1,450 ரூபாய்; அச்சு வெல்லம், 250 மூட்டைகள் வரத்தாகி, ஒரு மூட்டை, 1,380 ரூபாய்
முதல், 1,420 ரூபாய் வரை விற்பனையா-னது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நாட்டு சர்க்கரை,
உருண்டை வெல்லம் கூடுதலாக வரத்தானது. விலையில் பெரிய மாற்றம் இல்லை.* ஈரோடு அடுத்த அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு,
1,978 தேங்காய் வரத்தா-னது. ஒரு கிலோ, 37.41 ரூபாய் முதல், 40.41 ரூபாய் வரை, 930 கிலோ தேங்காய்,
36,357 ரூபாய்க்கு விலை போனது.* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 760 ரூபாய்க்கு
ஏலம்போனது. இதேபோல் முல்லை, 255, காக்கடா, 150, செண்டுமல்லி,105, கோழி-கொண்டை,115,
ஜாதிமுல்லை,500, கனகாம்பரம்,400, சம்-பங்கி,100, அரளி,120, துளசி,50, செவ்வந்தி,300 ரூபாய்க்கும்
விற்ப-னையானது.* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை
ஏலத்துக்கு, 363 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. கிலோ, 100 ரூபாய் முதல், 124 ரூபாய் வரை விலை
போனது.* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று
கூடியது. துவரம் பருப்பு(கிலோ), 170 ரூபாய், குண்டு உளுந்து, 140, பச்சைபயிர், 120, பாசிப்பருப்பு, 135,
கடலைப்பருப்பு, 120, கடுகு, 100, சீரகம், 400, கொள்ளு, 90, மல்லி, 120 முதல், 140 வரை, கருப்பு சுண்டல், 95,
வெள்ளை சுண்டல், 120 முதல், 160 ரூபாய் வரை, தட்டை-பயிர், 130, வெந்தயம், 100 ரூபாய்க்கும் விற்றது.
இந்த வாரமும் வியாபாரம் மந்தமாகவே இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்-தனர்.