ADDED : பிப் 28, 2024 02:10 AM
*
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள்
ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 6,௦௦௦ தேங்காய்கள் வரத்தாகி, கிலோ,
17.17 - 25.17 ரூபாய் வரை, 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய்
பருப்பு, 88 மூட்டை வரத்தாகி, கிலோ, 73.91 - 84.09 ரூபாய் என, 2.43
லட்சம் ரூபாய்க்கு விலை போனது. துவரை, 142 மூட்டை வரத்தாகி, கிலோ, 107.79
- 90.19 ரூபாய் என, 9.02 லட்சம் ரூபாய்; எள் நான்கு மூட்டை; ஆமணக்கு
மூன்று மூட்டை; தட்டைப்பயிறு ஒரு மூட்டை; பச்சை பயறு, ஐந்து மூட்டை;
உளுந்து நான்கு மூட்டை; கொள்ளு ஏழு மூட்டை; நரிப்பயறு 24 மூட்டை; அவரை
மூன்று மூட்டை வரத்தானது. அனைத்து வேளாண் விளைபொருட்களும், 14.53
லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த
ஏலத்தில் ஜாதி முல்லை கிலோ, 600 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை பூ-460,
முல்லை-550, காக்கடா-250, செண்டுமல்லி-40, கோழிக்கொண்டை-87,
கனகாம்பரம்-410, சம்பங்கி-20, அரளி-50, செவ்வந்தி-180, துளசி-40
ரூபாய்க்கும் ஏலம் போனது.
* கொடுமுடி ஒழுங்குமுறை
விற்பனைக்கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம்
நேற்று நடந்தது. தேங்காய், 4,423 வரத்தாகி ஒரு கிலோ, 21 ரூபாய் முதல்,
26.89 ரூபாய் வரை ஏலம் போனது.
கொப்பரை தேங்காய், 434 மூட்டைகள்
வந்தன. முதல் தரம் கிலோ, 75.19 ரூபாய் முதல், 84.09 ரூபாய்; இரண்டாம் தரம்
கிலோ, 55.19 ரூபாய் முதல், 79.19 ரூபாய் வரை விற்றது.
எள், 32 மூட்டை
வந்தது. கறுப்பு எள் கிலோ, 14௬ ரூபாய் முதல், 180.20 ரூபாய்; சிவப்பு எள்
கிலோ, 16௪ ரூபாய் முதல் 16௬ ரூபாய் வரை விலை போனது.
* தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நீடாமங்கலத்தில் கொள்முதல்
செய்யப்பட்ட, 2,௦௦௦ டன் நெல், சரக்கு ரயிலில் நேற்று ஈரோட்டுக்கு
வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு
அனுப்பினர். அரவை ஆலைகளில் அரைத்து அரிசியாக்கிய பிறகு, பொது
வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம், மக்களுக்கு வினியோகம்
செய்யப்பட்டும்.

