ADDED : ஜூன் 04, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 164 மூட்டை நிலக்கடலை வரத்தானது.
ஒரு கிலோ, 67.60 முதல், 74.60 ரூபாய் வரை, 5,672 கிலோ நிலக்கடலை, 4.௧௧ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. 598 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 52.௫௨ ரூபாய் முதல் 58.௧௦ ரூபாய் வரை, 262 கிலோ தேங்காய், 14,623 ரூபாய்க்கு விற்பனையானது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 680 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 206.79 முதல், 211.75 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 172.39 முதல், 20௭ ரூபாய் வரை, 30,728 கிலோ கொப்பரை, 60.௫௭ லட்சம் ரூபாய்க்கு விற்றது.