ADDED : ஜூலை 09, 2025 01:33 AM
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஜாதி முல்லை ஒரு கிலோ-600 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை-480, முல்லை-160, காக்கடா-175, செண்டுமல்லி-100, கோழிக்கொண்டை-90, கனகாம்பரம்-400, சம்பங்கி-50, அரளி-100, துளசி-50, செவ்வந்தி- 220 ரூபாய்க்கும் விற்பனையானது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,147 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 240 முதல், 261.79 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 13௧ ரூபாய் முதல் 24௭ ரூபாய் வரை, 51,813 கிலோ கொப்பரை, 1.௨௭ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 1,685 தேங்காய் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 64.64 ரூபாய் முதல் 68.68 ரூபாய் வரை, 758 கிலோ தேங்காய், 51,531 ரூபாய்க்கு விற்றது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 23,580 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 55.19 முதல், 66.39 ரூபாய் வரை விற்பனையானது. கொப்பரை தேங்காய், 663 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 248.61 ரூபாய் முதல், 253.21 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 195.39 முதல், 247.17 ரூபாய் வரை, 30,590 கிலோ கொப்பரை தேங்காய், 73.௭௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், 10,968 தேங்காய் வரத்தாகி, ஒரு கிலோ, 46-65 ரூபாய்; 17 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 215-257 ரூபாய்; 35 மூட்டை எள் வரத்தாகி, கிலோ, 96-124 ரூபாய்க்கும் விற்றது. ஒரு மூட்டை உளுந்து வரத்தாகி, கிலோ-65 ரூபாய், பச்சை பயறு ஒரு மூட்டை வரத்தாகி, கிலோ, 93 ரூபாய்க்கும் ஏலம் போனது.
* பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 9,௦௦௦ தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 41 - 72.20 ரூபாய்க்கு விற்றது. நெல், 108 மூட்டை வரத்தாகி, கிலோ, 22.38 - 30.61 ரூபாய்; தேங்காய் பருப்பு, 75 மூட்டை வரத்தாகி, கிலோ, 224.09 - 258.08 ரூபாய்; நிலக்கடலை, 35 மூட்டை வரத்தாகி கிலோ, 69.59 - 75.79 ரூபாய்; எள், 20 மூட்டை வரத்தாகி கிலோ, 119.29 - 85.39 ரூபாய்க்கு விலை போனது.