ADDED : ஜூலை 28, 2025 04:55 AM
* பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், எள் ஏலம் நடந்தது. வெள்ளை எள் வரத்தாகி, கிலோ, 70.19 - 115.60 ரூபாய்; சிகப்பு எள் கிலோ, 60.01 - 89.09 ரூபாய், கருப்பு எள் கிலோ, 70.19 - 136.89 ரூபாய் என, 77 மூட்டை, 5.09 லட்சத்துக்கு விற்றது. இதேபோல் தேங்காய் பருப்பு நான்கு மூட்டை வரத்தாகி, கிலோ, 170.19 - 241.21 ரூபாய்க்கு விற்றது. தேங்காய், 660 காய்கள் வரத்தாகி ஒரு காய், 26.27 - 32.70 ரூபாய்க்கு விற்றது.
* வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 15 டன் முருங்கை வரத்தானது. ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 11 டன் வரத்தானது, செடி முருங்கை கிலோ, 7 ரூபாய், மர முருங்கை, 8 ரூபாய், கருப்பு முருங்கை, 12 ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் புதுப்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் நடந்த வாழை ஏலத்தில் செவ்வாழை தார், 980 ரூபாய், தேன்வாழை, 720; பூவன் தார், 580; ரஸ்தாளி தார், 800; மொந்தன், 350; ஜி-9 தார், 430; பச்சை நாடன், 500க்கும் விற்றது. கதலி கிலோ, 45-68 ரூபாய், நேந்திரன் கிலோ, 16-38 ரூபாய் வரை விற்றது.
* அந்தியூர் வார சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கால்நடை சந்தை நடந்தது. இதில், ௫,௦௦௦க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டன. மாடு, 2,000 ரூபாய் முதல் 49 ஆயிரம் ரூபாய்; எருமை, 3,௦௦௦ ரூபாய் முதல், 56 ரூபாய் வரை, 1.25 கோடிக்கு கால்நடை விற்றது.

